Breaking News
Home / செய்திகள் / திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பைக்கில் வந்து தடுமாறி விழுந்த இளைஞர்களை தூக்கும் போது பட்டன் கத்தி வைத்திருந்ததால் பொதுமக்கள் “கவனித்து” போலீசில் ஒப்படைப்பு.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பைக்கில் வந்து தடுமாறி விழுந்த இளைஞர்களை தூக்கும் போது பட்டன் கத்தி வைத்திருந்ததால் பொதுமக்கள் “கவனித்து” போலீசில் ஒப்படைப்பு.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பைக்கில் வந்து தடுமாறி விழுந்த இளைஞர்களை தூக்கும் போது பட்டன் கத்தி வைத்திருந்ததால் பொதுமக்கள் “கவனித்து” போலீசில் ஒப்படைப்பு.

அவிநாசி பேரூராட்சி அலுவலகம் அருகே சேயூர் சாலையில் சூறாவாளி காற்று காரணமாக மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியே பைக்கில் அதிவேகமாக வந்த மூன்று இளைஞர்கள் திடீரென தவறி விழுந்தனர். இதையடுத்து அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் இளைஞர்களை தூக்க முயன்றபோது அவர்களில் ஒருவரிடம் இருந்து பெரிய பட்டன் கத்தி கீழே விழுந்துள்ளது. மேலும் அவர்கள் மது போதையில் இருந்ததும் தெரியவந்ததை அடுத்து, பொதுமக்கள் இளைஞர்களை “கவனித்து” அவிநாசி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டதில் அவர்கள் கோவையை சேர்ந்த அஸ்வின் (24), ரஞ்சித்குமார் (25) மற்றும் சிராஜ்தீன் (28) என தெரியவந்தது. அவர்கள் மீது மது அருந்தி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, கொரோனா தொற்று தடுப்பு விதியை மீறி ஒரே பைக்கில் மூன்றுபேர் போனது என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கலாம் செய்திகளுக்காக திருப்பூர் மயில் மணி

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *