Breaking News
Home / செய்திகள் / இ – பாஸ் மோசடியில் அதிகாரிகள் உடந்தை? திருப்பூர், திருச்சிக்கு தனிப்படை விரைவு!

இ – பாஸ் மோசடியில் அதிகாரிகள் உடந்தை? திருப்பூர், திருச்சிக்கு தனிப்படை விரைவு!

இ – பாஸ் மோசடியில் அதிகாரிகள் உடந்தை? திருப்பூர், திருச்சிக்கு தனிப்படை விரைவு!

வேலுார்; வேலுாரில் நடந்த, ‘இ – பாஸ்’ மோசடியில், புரோக்கர்களுடன் அதிகாரி களுக்கும் தொடர்பு உள்ளது தெரிந்ததால், திருப் பூர் மற்றும் திருச்சிக்கு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

வாலிபர் கைதுஇந்தியா முழுதும் செல்ல, 1,500 ரூபாய் கொடுத்தால், இரண்டு மணி நேரத்தில், கலெக்டர் அலுவலக ஒப்புதலுடன், ஒரிஜினல் இ – பாஸ் வாங்கித் தருவதாக, ‘வாட்ஸ் ஆப்’ குரூப்களில் தகவல் அனுப்பிய, வேலுார் பெரிய அல்லாபுரத்தைச் சேர்ந்த, 18 வயது வாலிபரை, அரியூர் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.விசாரணையில், திருப்பூரைச் சேர்ந்த வடிவேலு என்பவரின் தலைமையில், புரோக்கர்கள் மோசடியில் ஈடுபட்டதும், அதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இ – பாஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது. வடிவேலு தற்போது திருச்சியில் உள்ளதாக கிடைத்த தகவல்படி, அவர் உள்ளிட்ட முக்கிய நபர்களை பிடிக்க, தனிப்படை போலீசார் நேற்று திருப்பூர் மற்றும் திருச்சிக்கு விரைந்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது, கிடைத்த தகவல்கள்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இ – பாஸ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தால், விசாரணைக்கு பின், இலவசமாக, இ – பாஸ் கொடுக்க வேண்டும் என்பது அரசு விதி. தமிழகம் முழுதும், ஒரு வாரத்துக்கு, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர், இ – பாஸ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.இதில், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களில் உள்ள, மொபைல் போன் எண்கள், புரோக்கர்களுக்கு சில நிமிடங்களில் சென்று விடுகின்றன. புரோக்கர்கள் அவர்களுடன் பேசி, ‘கூகுள் பே’ மூலம், 1,500 ரூபாய் பெற்று, இ – பாசை, ‘மெயில்’ அல்லது ‘வாட்ஸ் ஆப்’பில் அனுப்புகின்றனர். அவர்கள் கொடுக்கும், இ – பாஸ்கள், 90 சதவீதம் உண்மையானவை. வெளி மாநிலத்துக்கு கொடுக்கும், இ – பாஸ், 10 சதவீதம் மட்டும் போலியானது. புரோக்கர்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு, விசாரணையின்றி இ – பாஸ் கிடைக்கிறது.விசாரணைகைதான, வேலுார் வாலிபரின் மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்ததில், புரோக்கர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரின் மொபைல்போன் எண், ‘வாட்ஸ் ஆப்’பில் அனுப்பிய, இ – பாஸ் ஆகியவை இருந்தன. இதனால், அவர்களிடம் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கலாம் செய்திகளுக்காக திருப்பூர் மயில் மணி

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *