Breaking News
Home / செய்திகள் / திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மீட்கப்பட்ட 38 குழந்தை தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மீட்கப்பட்ட 38 குழந்தை தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மீட்கப்பட்ட 38 குழந்தை தொழிலாளர்கள் ஊருக்கு மாவட்ட ஆச்சியாளர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பும் பணி நடைபெற்றது

திருப்பூர் அவிநாசி பதியில் உள்ள ஆலத்தூர் என்ற இடத்தில் தனியார் நூற்பாலை சொந்த மான தொழிற்சாலையில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை கடந்த மாதம் 29 ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் மீட்டனர் கடந்த மாதம் 24ஆம் தேதி தனியார் நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்கள் அதிகப்8 டியாக வேலை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் அந்த நூற்பாலையில் ஆய்வு செய்தனர்

அதன் அடிப்படையில் அந்த நூற்பாலையில் வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் மற்றும் பல மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் குழந்தைகளை பாதுகாப்பு துறையினர் மீட்ட நிலையில் இன்று 38 பேரையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் விஜய்காந்த்திகேயன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேருந்து வசதியும் உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது மேலும் குழந்தை தொழிலாளர்களை வைத்து பணி செய்யவைத்த ஆலத்தூர் தனியார் நூர்பாலை தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

கலாம் செய்திகளுக்காக
திருப்பூர் மயில் மணி

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *