Breaking News
Home / செய்திகள் / சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

சிங்கம்புணரி அண்ணா மன்றம் முன்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் பெரியகருப்பன் அவர்கள் தலைமை ஏற்றார். .டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து கொரோனா காலத்தில் பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு கழகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிங்கம்புணரி ஒன்றிய நகர மற்றும் மகளிர் அணி சார்பாக ஆதரவற்றோர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் சேலை வழங்கப்பட்டது. சுமார் ஆயிரத்தி இருநூறு ரூபாய் மதிப்புள்ள இந்த தொகுப்பு 70க்கும் மேற்பட்ட வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து கலை இலக்கிய அணி சார்பாக வள்ளலார் அன்னதான கூடத்தில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் பெரியகருப்பன் வழங்கினார். இந்நிகழ்வுக்கு சிங்கம்புணரி ஒன்றிய நகர திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பூமிநாதன் நகரச் செயலாளர் எம் எஸ் யாகூப் மற்றும் செயற்குழு உறுப்பினர் கணேசன் பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து சோமசுந்தரம் ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர் ஒன்றிய இலக்கிய அணி பொறுப்பாளர் தனுஷ்கோடி மணி கதிர்காமன் நகர பொருளாளர் கதிர்வேல் நகர இலக்கிய அணி மணிமாறன் நகர மகளிர் அணி அமைப்பாளர் நிர்மலா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏடிஎம் ரவி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் இளைஞரணி மனோகரன் மணப்பட்டி பாஸ்கரன் புகழேந்தி மற்றும் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *