Breaking News
Home / செய்திகள் / இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட கோரி தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநில தலைவர் திருமுருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட கோரி தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநில தலைவர் திருமுருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட கோரி
தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநில தலைவர் திருமுருகன்
தமிழக அரசுக்கு கோரிக்கை

இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட கோரி
தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநில தலைவர் திருமுருகன்
கோரிக்கை
விடுத்துள்ளார்
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கண்டிப்பாக கைவிட வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் மற்றும் தொழில்துறையினர் மட்டுமே. பொதுமக்கள் கடந்த 5 மாதங்களாக தொழில் ஏதும் இன்றி பாதிக்கப்பட்டு தாங்கள் வாங்கிய கடனை கட்டமுடியாமல் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இன்னும் 25 நாட்கள் கழித்து அந்த தவணைத் தொகையை கட்ட முடியுமா பழைய நிலையை திரும்புவதற்கு இ பாஸ் என்ற நடைமுறையை ரத்து செய்யப்பட வேண்டும். அல்லது ஒருவருட தவணைத் தொகை முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.
மாவட்டத்துக்குள் ஒரு நபர் சுற்றிவந்தால் கொரானா பரவாது? அதே நபர் மாவட்டத்தை விட்டு வெளியே சென்றால் கொரானா வந்து விடுமா? மத்திய அரசு சொன்ன பின்னரும் மாநிலம் ஏன் பிடிவாதம் ? செய்கிறது. ஏற்கனவே சென்னை தேறி வருகிறது. அதுவும், herd immunity யால் என்பது புரிகிறது.. மற்ற ஊர்களிலும் திறந்து விட்டால்தான் herd immunity வரும். இ பாஸ் லஞ்சத்திற்க்கே வழி வகிக்கிறது.. மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர்.. குறிப்பாக சிறு குறு தொழில் புரிவோர் இ.பாஸ் என்பதற்கு பதில் இ.காஸ் என்று வைக்கலாம். மருத்துவமனை போகவேண்டும் என்று 15முறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. மேலும் தனிமையில் இருக்கும் தனது உடல் நலம் பாதித்த பெற்றோரை பார்க்க கூட பெற்ற பிள்ளைக்கு உரிமை இல்லை என்பது போல் இருக்கிறது
ஓரு சாதாரண இ.பாஸ்க்கு கூட மக்கள்
தத்தளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இ.பாஸ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *