Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு, குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை திருத்துவதை கைவிட வேண்டும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் முழுமையாக நீதிமன்றங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற வாயில் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க பொதுச்செயலாளர் பரமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மரிய ஸ்டீபன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் அனிட்டர் ஆல்வின், பாலசுப்பிரமணியம், அனந்த சேகர் மற்றும் உதயகுமார், பாலஜனாதிபதி, வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் தக்கலை, குழித்துறை, இரணியல் நீதிமன்றங்களைச் சேரந்த வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *