Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில், காசு வைத்து சூதாடிய 29 பேர் கொண்ட, கும்பல் கைது

திருநெல்வேலியில், காசு வைத்து சூதாடிய 29 பேர் கொண்ட, கும்பல் கைது

திருநெல்வேலியில், காசு வைத்து சூதாடிய 29 பேர் கொண்ட, கும்பல் கைது! 4 லட்சத்து, 58 ஆயிரம், ரொக்கப்பணம் பறிமுதல்!

திருநெல்வேலி மாநகர காவல் சரகத்துக்கு உட்பட்ட, பாளையங்கோட்டை ரகுமத் நகரில் உள்ள, ஒரு “தனியார்” திருமண மண்டபத்தில், இன்று (ஆக.9) “முழு ஊரடங்கு” காரணமாக, சிலர் கும்பலாக, “காசு” வைத்து சூதாடுவதாக, மாநகர காவல்துறைக்கு, “ரகசிய” தகவல் வந்ததைத் தொடர்ந்து, அந்த மண்டபத்தில், திருநெல்வேலி “சட்டம், ஒழுங்கு” பிரிவு, “காவல் உதவி ஆணையர்” இ.சதீஷ் குமார் தலைமையில், போலீசார் “அதிரடியாக” நுழைந்து, “சோதனை” நடத்தினர்.

அப்போது அங்கு, 29 பேர் கொண்ட “கும்பல்” ஒன்று, “காசு” வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் “சுற்றி”வளைத்து பிடித்து, “கைது” செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய், ரொக்கப்பணத்தைக் கைப்பற்றினர். அத்துடன் அவர்களிடமிருந்து 26 விலை உயர்ந்த செல்போன்கள், 22 மோட்டர் பைக்குகள், 2 மணல் லாரிகள் மற்றும் 1 கார் ஆகியவற்றையும் “பறிமுதல்” செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து, “வழக்குப்பதிவு” செய்து, தொடர்ந்து “விசாரணை” நடத்தி வருகின்றனர்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *