Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில் “சித்ரவதைக்கு எதிராக, சட்டம் இயற்ற கோரி ஆர்ப்பாட்டம்!”

திருநெல்வேலியில் “சித்ரவதைக்கு எதிராக, சட்டம் இயற்ற கோரி ஆர்ப்பாட்டம்!”

“சித்ரவதைக்கு எதிராக, உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்!”- மத்திய அரசை வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம்!”

சித்ரவதைக்கு எதிரான சட்டத்தை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்! சித்ரவதைகளை தடுத்து நிறுத்திட, மாவட்டந்தோறும் “தனிஅலுவலர்கள்” நியமிக்கப்பட வேண்டும்!

மாநில மனித உரிமை ஆணையத்திற்கு, கூடுதல் அதிகாரங்களை வழங்கிட வேண்டும்!” ஆகிய,”மூன்று” அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில், இன்று (ஆகஸ்ட். 10) மாலையில், “கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

“இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு” சார்பில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதன் “ஒருங்கிணைப்பாளர் ” அ.பீட்டர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரகுணன், எஸ்.டி.பி.ஐ. சாகுல் அமீது உஸ்மானி, பார்வர்டு பிளாக் சீனிப்பாண்டியன், ம.தி.மு.க.அகஸ்டின் பெர்ணான்டஸ், சீர்மரபினர் உரிமை மீட்பு இயக்கம் அரிகர பாண்டியன், மானாவாரி இயற்கை அமைப்பு சுரேஷ் ராஜா, விடுதலை சிறுத்தைகள் முத்து வளவன், பொதுநல அமைப்பு பால்.அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று, கோரிக்கைகளை முன்வைத்து, “கோஷம்” போட்டனர்.” கொரோனா ஊரடங்கு” காரணமாக, அரைமணிநேரம் மட்டுமே, நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், அனைவரும் அந்த இடத்தில் இருந்து, உடனடியாக “கலைந்து” சென்றனர்.

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *