Breaking News
Home / செய்திகள் / திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மகளிடம் வரதட்சனை கேட்ட மருமகன் குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து தாய் தனது மகள்களுடன் காவல்நிலையம் முன்பு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மகளிடம் வரதட்சனை கேட்ட மருமகன் குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து தாய் தனது மகள்களுடன் காவல்நிலையம் முன்பு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில்
மகளிடம் வரதட்சனை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து தாய் தனது மகள்களுடன் காவல்நிலையம் முன்பு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை, சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஹேமா பாரதி (21). கடந்த ஒன்னரை வருடத்திற்கு முன்னர் மஸ்தான் தெருவைச் சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகாலிங்கம் இறந்து விட்டநிலையில் மல்லிகா தனது இருமகள்களுடன் வசித்துவருகிறார். இந்நிலையில் மூத்த மகள் ஹோமாபாரதியை கணவர் குடும்பத்தினர் வரதட்சனைகேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தற்போது ஏழுமாத கர்ப்பிணியாக உள்ள ஹோமாபாரதியை வளைகாப்பு நடத்த தாயாரிடம் பணம், நகை வாங்கி வருமாறுகூறி கடந்த சில நாட்களுக்கு முன் அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹேமாபாரதி மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தினசரி தனது தாயாருடன் காவல்நிலையத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி கேட்டும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மணப்பாறை காவல்துணை கண்காணிப்பாளரை நேரில் பார்த்து முறையிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்கச் சொல்வதாககூறி அவர்களை மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதனால் மீண்டும் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்த ஹேமாபாரதியையும் அவரது தாயார் மல்லிகாவையும் மகளிர் போலீசார் டி.எஸ்.பியிடம் சென்றால் நடவடிக்கை எடுக்கவேண்டுமா? எனக்கூறி திட்டியதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த மல்லிகா தனது மற்ற இரு மகள்கள் சுவாதி, பூமிகாவுடன் சேர்ந்து காவல்நிலையம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மகளின் புகாருக்கு நடவடிக்கை எடுக்கக்கேட்டு தாயார் தனது இரு மகள்களுடன் காவல்நிலையம் முன்பு ஓரு மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனயைடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார்.

மணப்பாறை செய்திகள் லெட்சுமணன்

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *