Breaking News
Home / செய்திகள் / திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இநதிய விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதையும், மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், வேளாண் சேவை ஒப்பந்த சட்டங்களை கைவிட வலியுறுத்தியும், விவசாய விலை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமையை முதலாளிகளுக்கு கொடுப்பதை கண்டித்தும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும், நூறுநாள் திட்டத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும், தினக்கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

மணப்பாறை செய்தியாளர் லெட்சுமணன்

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம்.- யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *