Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில் மாலை முரசு” நாளிதழ் அதிபர் ராமச்சந்திர ஆதித்தனினின், 86-ஆவது பிறந்த தினம்

திருநெல்வேலியில் மாலை முரசு” நாளிதழ் அதிபர் ராமச்சந்திர ஆதித்தனினின், 86-ஆவது பிறந்த தினம்

“மாலை முரசு” நாளிதழ் அதிபர் ராமச்சந்திர ஆதித்தனினின், 86-ஆவது பிறந்த தினம்! ஜான் பாண்டியனின் “தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” சார்பில், மாலைகள் அணிவித்து மரியாதை!

பத்திரிகை உலகில், நெடுங்காலமாக, தனக்கென்று ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும், முன்னணி மாலை நாளிதழான, “மாலை முரசு” நாளிதழின் அதிபரும், பத்திரிக்கை உலகின் முன்னோடிகளில் ஒருவருமான, “அமரர்” பா.ராமச்சந்திர ஆதித்தனினின், 86- ஆவது “பிறந்த தின விழா”, இன்று (ஆகஸ்ட்.11) தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது.

அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலியில், ஜான் பாண்டியனின், “தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” சார்பில்,ராமச்சந்திர ஆதித்தனின், முழுவுருவப் படத்திற்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலாளர் நெல்லையப்பன் “மலர் மாலை”அணிவித்து, “மரியாதை” செய்தார்.

இந்நிகழ்ச்சியில், தொழிற்சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மகேந்திரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் “சிவந்தி” முத்துப்பாண்டி, பாளையங்கோட்டை ஒன்றியச் செயலாளர் பரமசிவ பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ராமச்சந்திர ஆதித்தனினின், நினைவைப் போற்றிடும் வகையில், அனைவரும் “புகழ் கோஷம்” போட்டனர்.

About Kanagaraj

Check Also

மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது

மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது. திருச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *