Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில், “சுதந்திர தினவிழா” வினை, “சிறப்பாக” கொண்டாடுவது குறித்த, ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலியில், “சுதந்திர தினவிழா” வினை, “சிறப்பாக” கொண்டாடுவது குறித்த, ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலியில், “சுதந்திர தினவிழா” வினை, “சிறப்பாக” கொண்டாடுவது குறித்த, ஆலோசனை கூட்டம்! “மாவட்ட ஆட்சித்தலைவர்” ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில், நடைபெற்றது!

இந்தியத் திருநாட்டின், 74-ஆவது “சுதந்திர தின விழா”வினை, பாளையங்கோட்டை வ.உ.சி.திடலில், “சிறப்பாக” கொண்டாடுவது குறித்த, “அனைத்துத் துறை அலுவலர்கள்” பங்கேற்ற, “ஆலோசனைக் கூட்டம்”, “மாவட்ட ஆட்சித் தலைவர்” ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் “மாவட்ட ஆட்சியர்” அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய, “மாவட்ட ஆட்சியர்” ஷில்பா, தம்முடைய உரையில் குறிப்பிட்டதாவது :-” சுதந்திர தினவிழா பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு தொடர்பான ஏற்பாடுகளை, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். விழாவுக்கு வருகின்ற பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பிட வசதி ஆகியவற்றை, மாநகராட்சி செய்திட வேண்டும்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கவுரவித்து, அவர்களுக்கு பொன்னாடை அணிவிப்பது ஆகியவற்றிற்கான பணிகளை, வருவாய்த் துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும். விழாவில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி களுக்கான முயற்சிகளை, முதன்மைக் கல்வி அலுவலர் கவனித்திட வேண்டும்.

மொத்தத்தில், நமது மாவட்டத்தில், சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெறுவதற்கு, ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் பணிகளை, நல்ல முறையில், திருப்திகரமாக செய்திட வேண்டும்!”- இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்” ஷில்பா பிரபாகர் சதீஷ், கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், கோட்டாட்சியர்கள் திருநெல்வேலி மணீஷ் நாரணவரே, சேரன்மகாதேவி பிரதீக் தய்யாள், மாநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் குமார் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ செந்தில் ஆகியோரும், பங்கேற்று இருந்தனர்.

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *