Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி!

திருநெல்வேலி,
ஆக.12:- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், தேசிய மற்றும் தமிழகத் தலைவரான, பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி புத்தூரில் உள்ள, “சுந்தரம்” பல்நோக்கு மருத்துவமனையில், சென்ற மாதம் (ஜூலை) 30-ஆம் தேதி முதல், தீவிர சிகிச்சைப் பிரிவில், “சிகிச்சை” பெற்று வருகிறார். “அவர் பூரண குணம் அடைந்து, வீடு திரும்பி, முன்போலவே கட்சிப்பணிகளிலும், சமுதாயப் பணிகளிலும், ஈடுபடவேண்டும்!” என்று வேண்டி, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில், “பிரைமரி முஸ்லிம்லீக்” சார்பில், “சிறப்பு பிராத்தனை”, இன்று (ஆகஸ்ட். 12) மாலையில் நடைபெற்றது.

இங்குள்ள, பஜார் திடல், கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்கு, “நகரத் தலைவர்” ஹாபீஸ் எம்.எஸ்.முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். “இஸ்லாமிய மதக்குரு” ஹாபீஸ் எம்.ஏ.எஸ். செய்யது முகம்மது, சிறப்புப் பிரார்த்தனையை நடத்தினார். நிகழ்ச்சியில், “கட்சி நிர்வாகிகள்” நாகூர் கனி, ஜாகீர் உசேன் உட்பட பலரும், கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, “நலிவுற்ற” மக்களுக்கு, “நலத்திட்ட” உதவிகளும் வழங்கப்பட்டன.

இதற்கிடையே, பேராசிரியர் காதர் முகைதீன், தற்பொழுது, “தீவிர சிகிச்சை” பிரிவில் இருந்து, “தனி” அறைக்கு மாற்றப்பட்டு விட்டதாக, “கட்சி” வட்டாரங்களை “மேற்கோள்” காட்டி, எமது “திருநெல்வேலி செய்தியாளர்” ஹஸன் தெரிவிக்கிறார்.

About Kanagaraj

Check Also

மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது

மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது. திருச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *