Breaking News
Home / செய்திகள் / தூத்துக்குடி விமான நிலையத்தில் 74வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி விமான நிலையத்தில் 74வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விமான நிலைய இயக்குனர் திரு என். சுப்பிரமணியன் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையில் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் தரம் உயர்த்தப் படுவதற்காக பாடுபட்ட விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவலுக்கு பிறகு தூத்துக்குடியில் விமான சேவை மீண்டும் தொடங்குவதற்காக அயராது உழைத்த மாநில சுகாதாரத்துறையினர் மருத்துவர்கள் செவிலியர்கள் விமான நிலைய காவல்துறையினர் விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

விமான நிலையத்தில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டு மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் விமான நிலைய சிவில் பிரிவு இணை பொது மேலாளர் திரு A இராதாகிருஷ்ணன் அவர்களும் அவர்களும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு பிரிவு துணை பொது மேலாளர் திரு ஆர் சுப்ரவேலு அவர்களும் நிலைய மேலாளர் திரு ஜெயராமன் அவர்களும் மற்றும் விமான நிலைய காவல் ஆய்வாளர் திருமதி விமலா அவர்களும் கலந்துகொண்டு சமாதான புறா பறக்க விடப்பட்டது.

விழாவில் விமான நிலையம் ஊழியர்களின் பாடல் நிகழ்ச்சியும் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக விமான நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவின் முடிவில் அனைவருக்கும் நன்றி கூறி இனிப்புகள் வழங்கப்பட்டன.

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *