Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில், தென்மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், டி.ஜி.பி.திரிபாதி அவசர ஆலோசனை!

திருநெல்வேலியில், தென்மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், டி.ஜி.பி.திரிபாதி அவசர ஆலோசனை!

திருநெல்வேலியில், தென்மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், டி.ஜி.பி.திரிபாதி அவசர ஆலோசனை!

திருநெல்வேலி, ஆக:-20:- திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய, மூன்று தென் மாவட்டங்களின் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் (டி.ஜி.பி) ஜே.கே.திரிபாதி, நேற்று (ஆகஸ்ட்.19) மாலையில், “அவசர ஆலோசனை” நடத்தினார்.

பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் வைத்து, ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற, இந்த கூட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (டி.ஐ.ஜி) பிரவீன் குமார் அபினபு, மாநகர காவல்ஆணையர் தீபக் எம்.டாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திருநெல்வேலி நெ.மணிவண்ணன், தென்காசி சுகுணாசிங், கன்னியாகுமரி வெ.பத்ரிநாராயணன் மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துணைஆணையர் ச.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அந்தந்த மாவட்டங்களில் நிலவிவரும், சட்டம், ஒழுங்கு நிலைமைகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள், நிலுவையில் உள்ள குற்றவழக்குகள், நன்கு அறியப்பட்ட குற்றவாளிகள், அரசியல் சூழ்நிலைகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகள், போலீசாரின் பிரச்சனைகள் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டன. “எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், போலீசார் “மிகுந்த” கவனத்துடனும், “அதிக” விழிப்படனும், செயல்பட வேண்டும்!” என்று, டி.ஜி.பி.திரிபாதி, கேட்டுக் கொண்டார். முன்னதாக, கடந்த 18-ஆம் தேதி, “வெடிகுண்டு” வீசப்பட்டதில், இறந்து போன, “போலீஸ்காரர்” சுப்பிரமணியனின், திருவுருவப்படத்திற்கு, டி.ஜி.பி.”மலர்கள்” தூவி,”புகழ் அஞ்சலி”செலுத்தினார்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *