Breaking News
Home / செய்திகள் / இராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி

இராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி

இராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர் பட்டியல் |ஒரு
மோசடியான கணக்கெடுப்பு,
அப்பட்டியலில் பெரிய பணக்காரர்களும் கோடீஸ்வரர்களும் அதிகமாக உள்ளனர், உண்மையான ஏழை எளிய மக்கள் அப்பட்டியலில் இல்லை, மேலும் பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பதால் தற்போது அது பொருத்தம் இல்லாத பட்டியலாக உள்ளது,

இதனால் அரசின் சலுகைகளைப் பெற முடியாமல் ஏழை எளிய மக்கள் பரிதவித்து வருகின்றனர்,
எனவே மோசடியான அந்தப் பட்டியலை ரத்து செய்து விட்டு உண்மையான ஏழைகளை கொண்ட புதிய பட்டியல் உருவாக்க வேண்டும்.
பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு உள்ளாட்சி மன்றங்கள் மூலம் பரிந்துரையை வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமேஸ்வரம் நகராட்சியில் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் ஆணையாளர் அவர்களே பரிந்துரை செய்ய வலியுறுத்தி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

சிபிஐ தாலுகா செயலாளர் சே.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்சியில் தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார், தாலுகா பொருளாளர், ரமணி,
V.K.ஆரோக்கியநாதன், நிர்வாகிகள் மோகன்தாஸ் , இன்னாசிமுத்து,P.ஜீவானந்தம்.திருவாசகம்.பிச்சை,முனீஸ்வரன், கருப்பையா, கண்ணன் சாகுல்ஹமீது, செந்தில்.சுகுமார், தனவேல், கமலசங்கர், ராஜா, மாடசாமி அன்சாரி, தர்மா , முகமதுஇப்ராகிம், முஸ்தபா,காமராஜ், நியாஸ்
உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கலாம் நியூஸ் டி.வி செய்திகளுக்காக ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *