Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி பணகுடியில் விவசாயிகளே தூர்வாரும் கால்வாய் பணி

திருநெல்வேலி பணகுடியில் விவசாயிகளே தூர்வாரும் கால்வாய் பணி

திருநெல்வேலி பணகுடியில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், விவசாயிகளே தூர்வாரும் “சூறாவளி” கால்வாய் பணிகள் முழுவீச்சில், நடைபெற்று வருகின்றன!

திருநெல்வேலி,ஆக.28:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் பணகுடியில், எட்டு குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும், “சூறாவளி” கால்வாயை, மாவட்ட நிர்வாகத்தின், அனுமதி பெற்று, அப்பகுதியின் விவசாயிகளும், தன்னார்வலர்களும், தூர்வாரி வருகின்றனர்.
இங்குள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, இந்த சூறாவளி கால்வாயில் மழைக்காலங்களில் சேருகிற தண்ணீரானது, பணகுடி, லெப்பைகுடியிருப்பு மற்றும் சிவகாமிபுரம் உட்பட மொத்தம் எட்டு குளங்களுக்கு வந்து சேர்கிறது. இதனால், பல ஏக்கர் விவசாய நிலங்கள், பாசனவசதி பெற்று வருகின்றன. ஆனால், பல மாதங்களாக,இந்த கால்வாயானது, உரிய பராமரிப்பு இன்றி, முட்கள் மற்றும் புற்பூண்டுகள் நிறைந்த நிலையில், “தங்குதடையின்றி” தண்ணீர் செல்வதற்கு, “லாயக்கற்றதாக” இருந்து வந்தது.

இதுகுறித்த தகவல்களை, “மாவட்ட ஆட்சியர்” கவனத்திற்கு, கொண்டு சென்ற, பணகுடி பகுதி “விவசாயிகள்” தங்களுடைய பொறுப்பில், “சூறாவளி” கால்வாயினை தூர்வாரி, “சீரமைத்திட” அனுமதியையும், பெற்றனர். அதனைத் தொடர்ந்து, கால்வாயினை “தூர்வாரும் பணிகள்”, உடனடியாக தொடங்கின. மொத்தம் ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு, இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்படுகிறது! என்பது, வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *