Breaking News
Home / செய்திகள் / தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.08.2020 அன்று விமானநிலைய குழு மற்றும் AEMC, ASC கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.08.2020 அன்று விமானநிலைய குழு மற்றும் AEMC, ASC கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.08.2020 அன்று விமானநிலைய குழு மற்றும் AEMC, ASC கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி I.A.S. தலைமை தாங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் திரு விஷ்ணு சந்திரன் I.A.S. மற்றும் உதவி ஆட்சியர் திரு சிம்ரன்ஜித் சிங் I.A.S. ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை விமான நிலைய இயக்குனர் திரு N. சுப்பிரமணியன் I.A.P. நடத்தினர்.

நாடு முழுவதும் COVID 19 காரணமாக மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் இந்தக் குழு கூட்டத்தில் இதன் முக்கிய உறுப்பினர்களான தூத்துக்குடி மாவட்ட எஸ்பி திரு ஜெயக்குமார் மற்றும் இந்திய கடலோர காவல்படை இந்திய விமானப்படை முக்கிய அதிகாரிகள் அனைவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு மேலும் காவலர்கள் தேவைப்படுவது மற்றும் விமான நிலைய நுழைவு எல்லையில் புறக்காவல் நிலையம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி முறையாக ஆய்வு செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் விமான நிலைய எல்லைக்குள் பறவைகள் விமானத்தில் மோதி விபத்து ஏற்படுத்துவதை தடுக்க விமான நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் குப்பைகள் மற்றும் மாமிசக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பது, கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் விமான நிலையத்தில் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது, திடக்கழிவு மேலாண்மை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் பேரில் இன்று (27.08.2020) தூத்துக்குடி மாவட்ட எஸ்பி திரு ஜெயக்குமார் விமான நிலையம் வந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வைக்கப்பட்ட கோரிக்கைக்கான காரணங்களை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் விமான நிலைய முனையம் மற்றும் ஓடுதளத்தை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து மேலும் தேவைப்படும் அளவு காவலர்களை பணிக்கு அமர்த்துவதாக உறுதியளித்தார். மேலும் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான இடமும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் நிலைய மேலாளர் திரு ஜெயராமன் அவர்களும் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

15 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டை துரிதமாக பெற்றுத்தந்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம்

15 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டை துரிதமாக பெற்றுத்தந்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மதுரை புதூர் பகுதியை சேர்ந்தவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *