Breaking News
Home / செய்திகள் / ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் அரண்மனையில் காங்கிரஸ் சார்பில்,கொரோனா நோய் தொற்று காலத்தில் நாட்டில் நிலவுகிற பதற்றமான சூழலில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக நீட் தேர்வு நடத்த முயற்சி செய்யும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியாபாண்டி,காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தொழிலதிபர்கள் ரமேஷ்,செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகரத்தலைவர் கோபி,மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன்,மாவட்ட செயலாளர் துல்கீப்,தீப்பொறி கர்ணன்,மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன்,முன்னாள் கவுன்சிலர் காமராஜ்,இளைஞர் காங்கிரஸ் சரவணக்குமார்,மேகநாதன் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷமிட்டனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக
ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *