Breaking News
Home / செய்திகள் / மணப்பாறையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக்கோரி பெண்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

மணப்பாறையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக்கோரி பெண்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

மணப்பாறையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக்கோரி பெண்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் வடக்குத்தெருவில் 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென கடந்த 1985ல் ஒன்றரை ஏக்கர் நிலம் அரசால் மற்றொரு பகுதியில் வழங்கப்பட்டதாகவும் தற்போது அரசால் ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் இடம் தனியார் ஆக்கரமிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்துவிட்ட நிலையில் சிறிய வீட்டிலேயே வசித்து வருவதோடு கழிப்பறை கட்டகூட இடமின்றி தவித்துவருகிறோம். இதனால் இயற்கை உபாதைகள் கழிக்க காட்டுப்பக்கம் ஒதுங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டு அந்த இடத்தை ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கவேண்டும் என கடந்த பல மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டுத்தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கருங்குளம் கிராமத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான பெண்கள் கையில் பாதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பினர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *