Breaking News
Home / செய்திகள் / ஜெயலலிதா – கருணாநிதி என்ற ஆளுமை இல்லாததால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பரமக்குடியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

ஜெயலலிதா – கருணாநிதி என்ற ஆளுமை இல்லாததால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பரமக்குடியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

ஜெயலலிதா – கருணாநிதி என்ற ஆளுமை இல்லாததால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பரமக்குடியில்
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் நடந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலாளர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரன பொருட்களை தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா வழங்கினார் பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது அவர் கூறியதாவது:- வரும் 2021சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளது அதற்காக தமிழ்நாடு முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றிவருகின்றனர்.வரப்போகும் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது .அது குறித்து பொதுக்குழு, செயற்குழு ,கூட்டம் கூடி, வரும் ஜனவரி முதல் வாரத்தில் கேப்டன் விஜயகாந்த் தனதுமுடிவைஅறிவிப்பார்.தமிழ்நாடு முழுவதும் வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார். தே.மு.தி.க.வினர் களத்தில் இறங்கி 2021 சட்டமன்ற தேர்தலில்மிகப்பெரியதிருப்புமுனையைஏற்படுத்துவோம்.தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம் .மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் ஜனவரி முதல் வாரத்தில் விஜயகாந்த் புதிய கூட்டணி குறித்து நல்ல முடிவை அறிவிப்பார். கட்சியினர் அனைவரும் கேப்டன் தான் கிங்காக இருக்க வேண்டும் என கூறுகின்றனர். தே.மு.தி.க. தனித்து களம் காண வேண்டும் என தொண்டர்கள்உறுதியாக உள்ளனர் .ஜெயலலிதா ,கருணாநிதி, என்ற மிகப் பெரிய ஆளுமை இல்லாததால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது .அதனால்தான் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க விரும்புகிறோம் .2021 சட்டமன்ற தேர்தல் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் தேர்தலாகும். தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தலாகவும் ,தமிழக மக்களுக்கான தேர்தலாகவும் அமையும். தி.மு.க .அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தே.மு.தி.க .வைகூட்டணிக்கு அழைக்க தான் செய்கின்றனர் தே.மு.தி.க .இல்லாமல் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை .இதுவரை யாரோடும் நாங்கள் கூட்டணி குறித்து பேசவில்லை .அ.தி.மு.க -தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அரசியல் வேண்டும் என அனைவரும் சொல்கின்றனர் .மாற்று அரசியல் வேண்டும் .பூனைக்கு யார் மணி கட்டுவது ?அதைதே.மு.தி.க.செய்யப்போகிறது. மக்கள் தற்போது நன்றாக புரிந்து உள்ளனர் .அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியை நிறைகளும் குறைகளும் இருக்கும் ஆட்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் .அவர்கள் அறிவிக்கும் அளவிற்கு செயல்பாடுகள் இல்லை. வேகமாக செயல்பட வேண்டும் .இவ்வாறு கூறினார். அது சமயம் விஜயபிரபாகரன், ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளர் சிங்கை ஜின்னாா ஆகியோர் உடன் இருந்தனர்.

கலாம் நியூஸ் டி.வி.செய்திகளுக்காக ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *