Breaking News
Home / செய்திகள் / திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சூர்யா நல்லூர் கிராமத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் சுஸ்லான் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சூர்யா நல்லூர் கிராமத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் சுஸ்லான் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சூர்யா நல்லூர் கிராமத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் சுஸ்லான் நிறுவனம் மீதும் அதற்கு துணை போகும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சங்கரண்டாம்பாளையம் உள்வட்டம் சூரியநல்லூர் கிராமத்தில் புல எண்.755,760 ஆகிய இந்து சமய அறநிலைய துறைக்கு சேர்ந்த கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உயர் மின் கோபுரம் அமைத்து உயர் மின் கம்பி வடப்பாதை அமைக்கும் சுஸ்லான் நிறுவனம் மீதும் அதற்கு துணை போகும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுமதி மற்றும் உதவி ஆணையர் வெங்கடேஷ் மீதும் மற்றும் சுஸ்லான் நிறுவனதின் இடைத்தரகர்களாக செயல்படும் வதம்பசேரியை சேர்ந்த ரவி குண்டடம் பழையநவக்கொம்பு – வை சேர்ந்த ஆய்முத்து ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் கொள்கை பரப்பு செயளாலர் திரு.சிவக்குமார் , கங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்த தாராபுரம் முருகானந்தம், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் கனகராஜ், இந்து முண்ணனி நிர்வாகி கந்தசாமி, மே 17 இயக்கத்தை சார்ந்த சுப்பிரமணி, மற்றும் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் முத்துரத்தினம் மற்றும் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

கலாம் செய்திகளுக்காக எமது செய்தியாளர்

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *