Breaking News
Home / செய்திகள் / திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதுபானக்கடையை அலங்கியம் ரவுண்டானா மின் மயானம் எதிரே அமைத்துள்ள மதுபானக்கடையை அகற்ற கோரி மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதுபானக்கடையை அலங்கியம் ரவுண்டானா மின் மயானம் எதிரே அமைத்துள்ள மதுபானக்கடையை அகற்ற கோரி மனு

திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் மதுபானக்கடையை அலங்கியம் ரவுண்டானா மின் மயானம் எதிரே வரக்கூடாது என்று
தமிழ் புலிகள் கட்சி
மேற்கு மண்டல துணைச் செயலாளர்
ஒண்டி வீரன் அவர்கள்
தாராபுரம் சார் ஆட்சியர் திரு.பவன்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

தாராபுரம் நகரில் கடந்த பல ஆண்டுகளாக தாராபுரம் நகரை விட்டு தள்ளி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாருதி நகர் என்ற கிராமப் பகுதியில் காட்டுக்குள் 3831 எண் 2 என்ற டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வந்தது . இந்நிலையில் அந்த மதுபானக் கடையில் வியாபாரம் குறைவு என்ற காரணத்தை காட்டி அந்த கடையை தற்போது தாராபுரம் நகருக்குள் மின் மயானம் எதிரேயும் , தற்போது புதிதாக போடப்பட்டுள்ள நான்கு வழிச்சாலைக்கு மிக அருகிலும் , மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் , கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டுள்ளது . ஏற்கனவே விபத்துகள் அடிக்கடி நிகழும் அந்த நான்கு வழிச்சாலைக்கு அருகில் மாற்றப்பட்டுள்ளதால் குடிபோதையில் செல்லும் நபர்களால் விபத்துகள் அதிகம் நடக்கவும் , உயிர்பழி அதிகமாக நிகழவும் , வாய்ப்பு உள்ளது . எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனே மேற்கண்ட கடையான 3831 மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்

கலாம் செய்திகளுக்காக எமது செய்தியாளர்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *