Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் ஊராட்சியில் கிள்ளியூர் பேரூராட்சி குப்பை கிடங்கு அமைக்க முயற்சி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் ஊராட்சியில் கிள்ளியூர் பேரூராட்சி குப்பை கிடங்கு அமைக்க முயற்சி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் ஊராட்சியில் கிள்ளியூர் பேரூராட்சி குப்பை கிடங்கு அமைக்க முயற்சி
பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.

பாலூர் ஊராட்சிக்குட்பட்ட கிள்ளியூர் எ வருவாய் கிராமத்தில் புதிய புல எண் 652/12−ல் 60 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அப்பகுதியில் ஊராட்சி சார்பில் சுவர் எழுப்பி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டு  திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10−க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ரூ. 27 லட்சம் செலவில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படும் போது பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் நிலை உள்ளது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட பகுதியில் கிள்ளியூர் பேரூராட்சிக்கு குப்பை கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாக தரப்பில் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பாலூர் கிராம மக்கள் கடந்த ஜனவரி மாதம் 26−ம் தேதி நடந்த குடியரசு தின கிராம சபா கூட்டத்தில் கிள்ளியூர் பேரூராட்சி குப்பை கிடங்கு அமைக்க இடம் வழங்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி உள்ளனர். மேலும், அப்பகுதியில் குப்பை கிடங்கு அமைத்தால் அதனை சுற்றி சுகாதார கேடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இதனை மீறி மேற்குறிப்பிட்ட பகுதியில்  கிள்ளியூர் பேரூராட்சி குப்பை கிடங்கு அமைக்க அனுமதித்தால் பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்த மக்கள் தயாராகி வருகின்றனர்.

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *