Breaking News
Home / செய்திகள் / “கொரோனா வைரஸ்” தடுப்புப்பணிகளின் ஒருபகுதியாக, திருநெல்வேலி “ஸ்டார் ரோட்டரி சங்கம்” சார்பில், அரசு அலுவலகங்களில், “கபசுர மூலிகை குடிநீர்” விநியோகம்

“கொரோனா வைரஸ்” தடுப்புப்பணிகளின் ஒருபகுதியாக, திருநெல்வேலி “ஸ்டார் ரோட்டரி சங்கம்” சார்பில், அரசு அலுவலகங்களில், “கபசுர மூலிகை குடிநீர்” விநியோகம்

“கொரோனா வைரஸ்” தடுப்புப்பணிகளின் ஒருபகுதியாக, திருநெல்வேலி “ஸ்டார் ரோட்டரி சங்கம்” சார்பில், அரசு அலுவலகங்களில், “கபசுர மூலிகை குடிநீர்” விநியோகம்! துணை பதிவுத்துறை தலைவர் ஆறுமுகம் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி,செப்.3:- திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி சங்கம்” சார்பில், அதன் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள, அரசு அலுவலங்களுக்கு நேரடியாக சென்று, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும், கபசுர மூலிகை குடிநீர் வழங்கி வருகின்றனர். அதன்படி, மூன்றாம் கட்டமாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும், துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் பணியாற்றி வரும், அனைத்துப் பணியாளர்களுக்கும், கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, துணைப் பதிவுத்துறைத் தலைவர் யூ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்து, விநியோகத்தை துவக்கி வைத்தார். அலுவலகப் பணியாளர்கள் நடராஜன், வ.அம்மச்சியார், அருணா அம்மாள், மாதவராஜ், திருநெல்வேலி மாவட்ட அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.பெருமாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கப்பொருளாளர் மு.வள்ளிநாயகம், ஓட்டுநர்கள் சங்கத்தைச் சார்ந்த பெருமாள், தாஜூதீன் உட்பட பலர், இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டனர். கபசுர மூலிகை குடிநீர் விநியோகப்பணிகள், தொடர்ந்து நடைபெறும்! என்று, திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *