Breaking News
Home / செய்திகள் / திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மேனல்லூர் கிராமத்தில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்த பசு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மேனல்லூர் கிராமத்தில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்த பசு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மேனல்லூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான கல் குவாரிகள் உள்ளது. இக்குவாரிகளை சுற்றிலும் எந்தவொரு தடுப்பும் இல்லாத காரணத்தால் அக்குவாரி பள்ளத்தில் பல ஆடு , மாடுகள் தொடர்ந்து மேய்ச்சலுக்காக செல்லும் போது அப்பள்ளத்தை சுற்றி எந்த தடுப்பும் இல்லாததால் அடிக்கடி தவறி விழுந்து கால்நடைகள் இறப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று எட்டு மாத கர்ப்பிணி பசு ஒன்று மேய்ச்சலுக்காக சென்றபோது மண் சரிந்து குவாரி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டதுஇதுபோல் மேலும் எந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அப்பள்ளத்தை சுற்றி தடுப்புவேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *