Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பாலசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மூக்கம்மாள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் நெருக்கடியில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கொரோனா கால நெருக்கடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவர்கள் பெற்றுள்ள வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புச் சட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்தி தின ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் தனியார் பால் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் தாலிக்கு தங்கம் வழங்க வேண்டும் கொரோனா நிவாரண உதவியாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 5 ஆயிரமும், அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 7500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்து கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் ராமர், பாலமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்…

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக அலங்காநல்லூர் மனோஜ் குமார்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *