Breaking News
Home / செய்திகள் / கஞ்சா வியாபாரிகள் சொத்துகளை முடக்க சட்டத்தில் இடமுண்டு : ராமநாதபுரம் எஸ்பி.கார்த்திக்

கஞ்சா வியாபாரிகள் சொத்துகளை முடக்க சட்டத்தில் இடமுண்டு : ராமநாதபுரம் எஸ்பி.கார்த்திக்

கஞ்சா வியாபாரிகள் சொத்துகளை முடக்க சட்டத்தில் இடமுண்டு என ராமநாதபுரம் எஸ்பி.,கார்த்திக் கூறினார்.சென்னை பூக்கடை காவல் துணை ஆணையளராக இருந்த கார்த்திக்,ராமநாதபுரம் எஸ்பி.,யாக பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:குளச்சலில் உதவி எஸ்பியாகவும்,மதுரை நகர்,சென்னை பூக்கடை துணை ஆணையராக பணியாற்றி விட்டு ராமநாதபுரம் எஸ்பி.,யாக பொறுப்பேற்றுள்ளேன்.
மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு காக்கப்படும்.பணி நேரத்தில் என்னை பொதுமக்கள் சந்தித்து புகார் மனு அளிக்கலாம்.கஞ்சா விற்பனையை தடுக்க கஞ்சா வியாபாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. ஒரு முறை தண்டனை பெற்ற கஞ்சா வியாபாரிகள்,மறுபடியும் வியாபாரத்தை தொடர்ந்தால் அவர்களது உறவினர்களின் சொத்துகளை முடக்கவும் சட்டத்தில் உள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என கூறினார்.

கலாம் டி.வி.செய்தியாளர் ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *