Breaking News
Home / செய்திகள் / தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அம்பேத்காருக்கு சிலை அமைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அம்பேத்காருக்கு சிலை அமைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூரில் அம்பேத்காருக்கு சிலை அமைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூர் அம்பேத்கார் சிலை அமைப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முரசு தமிழப்பன் தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  திருச்செந்தூரில் டாக்டர் அம்பேத்கார் பெயரில் நினைவு பூங்கா உள்ளது. இதில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவு தூணும், பல தலைவர்களுக்கு சிலையும் உள்ளது. இந்த பூங்காவில் டாக்டர் அம்பேத்கார் முழு உருவ வெண்கலச் சிலையை அமைக்கக் கோரி கடந்த ஜூலை 20ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்தின் 40வது நாளான இன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இதனால் தமிழக அரசு காலம் கடத்தாமல் அம்பேத்காருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 14ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *