Breaking News
Home / செய்திகள் / தமிழகம் முழுவதும் சுங்கசாவாடியை அகற்றகோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் சுங்கசாவாடியை அகற்றகோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் சுங்கசாவாடியை அகற்றகோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுங்கசாவடியை அகற்றகோரி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், கடந்த 5 மாதங்களாக கொரோனா என்ற கொடிய நோயினால் நாட்டு மக்கள் அதிகமாக நோய் வாய்ப்பட்டும், இன்னுயிர் ஈந்தும் இந்த வேலையில் மக்கள் கல்வி மற்றும் வேலையில்லாமல் பண நெருக்கடியால், வீழ்ந்து கிடக்கும் நேரத்தில் மக்களிடம் கொள்ளையடிக்கும நோக்கத்தில் மத்திய அரசு சுங்க சவாடி என்ற பெயரில் சுங்க கட்டண வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. பிற மாநிலங்களில் சாலை பராமரிப்பு என்ற பெயரில் ரூ.5 மட்டுமே வசூலித்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் சிறிய வாகனத்திற்கு கூட ரூ.100க்கு மேல் வசூல் செய்து வருகிறார்கள். இதனால் சுங்க சாவடியை முழுமையாக அகற்ற கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் முத்தையாபுரம் பகுதிகளில் உள்ள நீண்ட காலமாக எரியாத தெருவிளக்குகளில் எரியவைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *