Breaking News
Home / செய்திகள் / ஏழ்மை நிலையிலும் பல சமூக சேவைகள் செய்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூரை சேர்ந்த பாரதிமோகன்

ஏழ்மை நிலையிலும் பல சமூக சேவைகள் செய்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூரை சேர்ந்த பாரதிமோகன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூரை சேர்ந்தவர் பாரதிமோகன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் பெரம்பூர் பாரதிமோகன்,

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வருமையிலும் தன்னை முழுமையாக சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டார். நாள்தோறும் மன நலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு முடி திருத்தம் செய்து தூய்மைப்படுத்தி காப்பகத்தில் ஒப்படைப்பது, ஆதரவற்ற முதியோர்களுக்கு நாள்தோறும் தேடிச்சென்று உணவு, போர்வை, உடைகள் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் அத்தியாவசிய பொருள்கள் வழங்குவது விலங்குகளுக்கு உணவளிப்பது என பல சமூக சேவைகளை சிலர் உதவியுடன் வாழ்நாள் முழுவதும் செய்து வரும் பெரம்பூர் பாரதிமோகன் சமூக சேவையை பாராட்டி 150 க்கும் மேற்பட்ட விருதுகள் சான்றுகள் கிடைத்துள்ளது.

பல மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் சேவையை பாராட்டி விருது பாராட்டு சான்றுகள் வழங்கியுள்ளனர்,

இந்நிலையில் தற்போது இவரது சமூக சேவையை வாழ்க்கை முழுவதையும் சேவைக்காக அர்பணித்த பெரம்பூர் பாரதிமோகனுக்கு ஐநா மனித உரிமை அமைப்பு தங்கள் அமைப்பின் இந்திய பிரநிதியாக சமூக சேவகர் பாரதிமோகன் என்று பாராட்டு சான்றும், மனித உரிமையின் உறுப்பினர் சான்றும் வழங்கி கௌரவித்து அங்கீகாரமும் வழங்கியுள்ளது. இதனை பெரம்பூர் ஊராட்சி சார்பில் பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருமையுடன் பாராட்டுகின்றனர்.

கலாம் நியூஸ் செய்திக்காக தரங்கம்பாடி பாலமுருகன்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *