Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில், இந்து மக்கள் கட்சியினர், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலியில், இந்து மக்கள் கட்சியினர், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலியில், இந்து மக்கள் கட்சியினர், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்! ராமநாதபுரம் அருண் பிரகாஷ் கொலை வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி!

திருநெல்வேலி, செப்.9:- ராமநாதபுரத்தைச் சேர்ந்த, இந்து முன்னணி பிரமுகர் அருண்பிரகாஷ் என்பவர், அண்மையில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலையில், குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காததைக் கண்டித்தும், விரைவில் கண்டுபிடித்து, கைது செய்ய வலியுறுத்தியும், திருநெல்வேலி சுத்தமல்லி சந்திப்பில், இந்து மக்கள் கட்சியினர் மாவட்டத் தலைவர் எஸ்.உடையார் தலைமையில், இன்று (செப்டம்பர்.9) கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தென் மண்டலச் செயலாளர் டி.கே.பி.ராஜபாண்டியன், மகளிர் அணித் தலைவி ஆர். காந்திமதி,மாவட்டப் பொருளாளர் சி.ராதா கிருஷ்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். எம். கணேச பாண்டியன், மாநகர் மாவட்டத் தலைவர் ஜே.வி.மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், அனைவரும் உடனடியாக கலைந்து சென்றனர்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *