Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில், “இந்திய விடுதலை போராட்ட வீரர்” மாவீரன் சுந்தரலிங்கனாரின் “நினைவேந்தல் நிகழ்ச்சி

திருநெல்வேலியில், “இந்திய விடுதலை போராட்ட வீரர்” மாவீரன் சுந்தரலிங்கனாரின் “நினைவேந்தல் நிகழ்ச்சி

திருநெல்வேலியில், “இந்திய விடுதலை போராட்ட வீரர்” மாவீரன் சுந்தரலிங்கனாரின், 221- ஆவது ஆண்டு “நினைவேந்தல்” நிகழ்ச்சி! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நடைபெற்றது!

இந்திய சுதந்திரத்துக்காக, வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதியாக இருந்து, ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி, தற்கொலையைப் படையை உருவாக்கி நாட்டுக்காக, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில், தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்த, மாவீரன் சுந்தரலிங்கனாரின், 221- ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி, இன்று (செப்டம்பர்.9) திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மகாராஜா நகரில், நாட்டுப்பற்றுடன் நடைபெற்றது. “தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், மாவட்டச் செயலாளர் அ.நாகராஜ சோழன், மாவட்டப் பொருளாளர் வே.முருகன், மாவட்ட இணைச் செயலாளர் கோ.துரைப்பாண்டியன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டி, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் கிங் தேவேந்திரன், வழக்கறிஞர் செல்வம் விஜயகுமார் மற்றும் வெல்டிங் முத்து ஆகியோர், மாவீரன் சுந்தர லிங்கனாரின் திருவுருவப்படத்திற்கு, “மலர் மாலைகள்” அணிவித்து, “வீர வணக்கம்”செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, *மாவீரன் சுந்தரலிங்கனாருக்கு, திருநெல்வேலியில் “மணிமண்டபம்” கட்ட வேண்டும். *தூத்துக்குடி மாவட்டம், கவர்ணகிரியில் நிறுவப்பட்டுள்ள, மாவீரன் சுந்தரலிங்கனாரின் கற்சிலையை, வெண்கலச் சிலையாக மாற்ற வேண்டும். * முன்பு இருந்ததைப் போலவே, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு, “மாவீரன் சுந்தரலிங்கனார் வளாகம்” என்று பெயர் சூட்ட வேண்டும். * தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, “தேவேந்திரகுல வேளாளர்” என்னும் பெயரில், “அரசாணை” வெளியிட வேண்டும்!- ஆகிய 4 தீர்மானங்கள், இந்த “நினைவேந்தல்” நிகழ்ச்சியின் போது, நிறைவேற்றப்பட்டன.

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *