Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே, வாலிபர் கொலை!

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே, வாலிபர் கொலை!

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே, வாலிபர் கொலை! சம்பவ இடத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு!

திருநெல்வேலி, செப்.10:- திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் அருகே உள்ள,மேல சிவ சுப்ரமணியபுரம், அழகநேரியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க, வாலிபர் ஒருவர், வெட்டிக்கொல்லப்பட்டு கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் அடங்கார் குளத்தைச் சேர்ந்த, சுகுந்தன் என்பது தெரியவந்தது. நேற்று நள்ளிரவில் அல்லது இன்று (செப்.10) அதிகாலையில், இந்தக் கொடூரக்கொலை நடந்திருக்கலாம்! என்று போலீசார் தெரிவித்தனர். இறந்து போன சுகுந்தனுக்கு, ஸ்ரீ தேவி என்ற மனைவியும், ஒரு வயது குழந்தையும், உள்ளனர். இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கொலை நடந்த இடத்தை, இன்று அதிகாலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அப்போது, துணைக் கண்காணிப்பாளர்கள் வள்ளியூர் உதயசூரியன், நாங்குநேரி தெரஸ் ஆகியோர் உடனிருந்தனர். கொலையாளிகள் யார்? என்பதும், கொலைக்கான காரணம் என்ன? என்பதும், தெரியவில்லை. எனினும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக, “தனிப்படைகள்” அமைக்கப்பட்டுள்ளன. கொலைச்சம்பவம் குறித்து, கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *