Breaking News
Home / செய்திகள் / ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டில் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்க்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு விழா

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டில் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்க்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு விழா

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டில் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்க்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியிம் தலைமை ஆசிரியர் ஞானபண்டிதன் அவர்களுக்கு, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது,அவருக்கு காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஊர் பொது மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியினை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அவர்கள் தொகுத்து வழங்கினார்,
பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வஜ்ஜிரம் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார், உதவி தலைமை ஆசிரியர் குமார்
வரவேற்புரை ஆற்றினார்,அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன்,தெற்கு ஒன்றிய செயலளர் வேடி,திமுக ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன்,அதிமுக நகர செயலாளர் சிவானந்தம்,திமுக நகர செயலாளர் பாபுசிவக்குமார்,
ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி கோவிந்தன்,
கவுன்சிலர் பூபதி,முன்னாள் தலைவர் பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,நிகழ்ச்சிக்கு
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவன தாளாளர் திரு
வே,சந்திரசேகரனார் அவர்கள் வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்,
பாராட்டு விழாவில் விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கே .சி. பெருமாள் சமூக ஆர்வலர் கே.பி. மாணிக்கௌதம் பொன்னாடை அணிவித்து மலர் கொடுத்து பாராட்டினார்கள் சிங்காரப்பேட்டை தலைமை ஆசிரியர் சிவராமன்,ஜோதி நகர் ராஜேந்திரன்,கார்த்தி,காந்தி ஆகியோர்
நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் ஞானபண்டிதன் அவர்களை வாழ்த்தி பாராட்டினர்,இதில் மாணிக்கம்,துணை தலைவர் பச்சையம்மாள் குப்புசாமி,
ஊராட்சி செயலர் அன்பு,
ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்,உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் நன்றி உரை ஆற்றினார்,
விழாவில்
அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்,

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் கே.சி. பெருமாள்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *