Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில் பரிதாபம்! மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பாலியல் பலாத்காரம்

திருநெல்வேலியில் பரிதாபம்! மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பாலியல் பலாத்காரம்

திருநெல்வேலியில் பரிதாபம்! மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பாலியல் பலாத்காரம்! மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

திருநெல்வேலியை அடுத்துள்ள, பொட்டல் என்ற இடத்தில், தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அடியில், மனநலம் குன்றிய, 24 வயது பெண் ஒருத்தியை, அதிகாலையில், மர்ம நபர்கள் சிலர், பாலியல் பலாத்காரம் செய்துமுடித்த நிலையில், அப்படியே விட்டு விட்டு ஓடிவிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும், திருநெல்வேலியில் உள்ள, “மனித உரிமை மற்றும் குற்றம் தடுப்பு அமைப்பு” நிர்வாகிகள், அந்த இடத்திற்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, தாழையூத்து சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில், ஒப்படைத்தனர். “மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு, மருத்துவ உதவிகளை உடனடியாக செய்திட வேண்டும்.! அத்துடன் அந்தப் பெண்ணை, அரசு சார்பிலான, பெண்கள் காப்பகத்தில் சேர்த்திட வேண்டும்! பாலியல் பலாத்காரம் செய்த மர்மநபர்களைக் கண்டுபிடித்து, உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுத்திட வேண்டும்.!” என, அந்த அமைப்பினர், காவல்துறையினரிடம் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையே, காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்துள்ள, காசியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, துரை என்பவரின் மகள் பிச்சம்மாள் என்பதும், சிறிதளவு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், இம்மாதம் (செப்டம்பர்) 8-ஆம் தேதி, வீட்டை விட்டு ஓடிவந்தவர் என்பதும், தெரியவந்துள்ளது. தாழையூத்து சங்கர்நகர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *