Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில், “கொரோனா”வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த, காவல் சார் ஆய்வாளர் உடல், அரசு மரியாதையுடன் தகனம்

திருநெல்வேலியில், “கொரோனா”வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த, காவல் சார் ஆய்வாளர் உடல், அரசு மரியாதையுடன் தகனம்

திருநெல்வேலியில், “கொரோனா”வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த, காவல் சார் ஆய்வாளர் உடல், அரசு மரியாதையுடன் தகனம்!

திருநெல்வேலி, செப்.12:- உலக மக்களில் பெரும்பாலோரை உயிர்ப்பலி கொண்ட, கொரோனா வைரஸ் தொற்று, திருநெல்வேலி காவல் சார் ஆய்வாளரையும் விடவில்லை.நெல்லை மாநகரக் காவல்துறையின் கீழ்உள்ள, தச்சநல்லூர் காவல் நிலையத்தில், காவல் சார் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் முருகன் (வயது.58). கடந்த சில தினங்களுக்கு முன்னர், “கொரோனா” வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளான முருகன், கடந்த 10 நாட்களாக, பாளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி “அரசு” மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைக்குப் பலனின்றி, இன்று (செப்டம்பர். 12) அதிகாலையில், முருகன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, காவல் சார் ஆய்வாளர் முருகனின் உடல், அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தச்சநல்லூரில் உள்ள, முருகனின் வீட்டில் இருந்து, அவருடைய உடல், ஊர்வலமாகக், “கரையிருப்பு” மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டது. காவல்துறை உயர்அலுவலர்கள் உட்பட, ஏராளமானோர், முருகனின் உடலுக்கு, “அஞ்சலி” செலுத்தினர். அதன் பின்னர், “காவல்துறை” சார்பில், 21 குண்டுகள் முழங்க, “இறுதி அஞ்சலி” செலுத்தப்பட்ட பிறகு, அந்த மயானத்தில், முருகனின் உடல் எரியூட்டப்பட்டது.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *