Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில், தமிழக அரசின், “நல்லாசிரியர்” விருது பெற்றுள்ள, “தலைமை” ஆசிரியருக்குப் பாராட்டு

திருநெல்வேலியில், தமிழக அரசின், “நல்லாசிரியர்” விருது பெற்றுள்ள, “தலைமை” ஆசிரியருக்குப் பாராட்டு

திருநெல்வேலியில், தமிழக அரசின், “நல்லாசிரியர்” விருது பெற்றுள்ள,”தலைமை” ஆசிரியருக்குப் பாராட்டு!

திருநெல்வேலி, செப்.14:-
திருநெல்வேலி மாவட்டம்,
நடுக்கல்லூரில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஹரிராம், இந்த ஆண்டின், தமிழகஅரசின் “டாக்டர் ராதாகிருஷ்ணன்” நினைவு “நல்லாசிரியர்” விருது பெற்றுள்ளார். அதன் அடிப்படையில்,
தலைமையாசிரியர் ஹரிராமை, கவுரவிக்கும் விதமாக, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து, “பெற்றோர் ஆசிரியர் கழகம்” மற்றும் ஆசிரியப் பெருமக்களின் சார்பில், “பாராட்டு” நிகழ்ச்சி, இன்று (செப்.14) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மானூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் “கல்லூர்” வேலாயுதம் தலைமை வகித்தார். “முதுகலை ஆசிரியர்” சேகர், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் துவக்கத்தில், வரலாற்றுப் பிரிவுக்கான, பட்டதாரி ஆசிரியர் ஜோசப் அந்தோணி மைக்கேல், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியைகள் பாக்கியலட்சுமி, கிருஷ்ணவேணி, ஜாஸ்லின், சுப்புலட்சுமி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர், விருது பெற்றுள்ள தலைமை ஆசிரியர் ஹரிராமை, பாராட்டிப் பேசினர். இதனைத் தொடர்ந்து, விழாத்தலைவர்
மானூர் ஊராட்சி ஒன்றிய, முன்னாள் தலைவர் “கல்லூர்” வேலாயுதம், தன்னுடைய திருக்கரங்களால், “நல்லாசிரியர்” ஹரிராமுக்கு, பொன்னாடை மற்றும் சந்தன மாலை அணிவித்து, வாழ்த்திப் பேசினார்.
“முன்னாள் ஊராட்சி தலைவர்கள்” கொண்டா நகரம் துரை ஆனைக்குட்டி, பழவூர் குமாரசாமி என்ற மணி, நடுக்கல்லூர் மல்லிகா, பெற்றோர் -ஆசிரியர் கழக உறுப்பினர் முத்துச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருணா ரவி, ஊர்த்தலைவர் ஆயிரத் தேவர், கணக்காளர் ஆறுமுகம் பிள்ளை, துணைத்தலைவர் கல்லூர் பாலசுப்ரமணியன், சுத்தமல்லி கூட்டுறவு வங்கி இயக்குனர் கண்ணன் உட்பட, பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், கணிதப் பிரிவுக்கான, பட்டதாரி ஆசிரியர் ராஜா முகமது நன்றி கூறினார்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *