Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகளுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் மதுரை சிம்மக்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் மதுரை பாண்டியன் அப்பளம் திருமுருகன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வங்கிகளில் கடன் தொகை வாங்கியுள்ள வணிகர்களை, இ.எம்.ஐ. கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தவணை தொகையை கட்டுவதற்கு தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் கால அவகாசத்தை வழங்க வேண்டும். வணிகர்களுக்கு நெருக்கடி தராமல் கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கூடுதல் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் அப்துல்லாஹ் உள்பட பலர் பங்கேற்றனர்.

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *