Breaking News
Home / செய்திகள் / திருச்சியில் Biznet ,FMCG நிறுவனத்தால் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு!

திருச்சியில் Biznet ,FMCG நிறுவனத்தால் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு!

திருச்சியில் Biznet ,FMCG நிறுவனத்தால் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு

திருச்சியில் Biznet என்ற FMCG உணவுப் தொழில் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தால், உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு தனியார் விடுதியில் கேம் ச்சேன்சர்ஸ் 2.o என்ற பெயரில் நடந்த இந்த கருத்தரங்கில், உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த ஆலோசனை மற்றும் கருத்தரங்கு கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உணவு உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொண்டன. Biznet என்ற நிறுவனத்தின் நிறுவனர் Rtn.S.சுந்தர் பேசுகையில், கொரோனா போன்ற சிக்கலான காலத்தில் உணவுப் பொருட்கள் விற்பனையில் எவ்வகையான உத்திகளை கையாள வேண்டும் எனவும், சந்தைப்படுத்துதலில் உள்ள சமகால பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்தும், ஆக்கபூர்வமான சூழல்களை கையாளுவது குறித்தும் எடுத்துரைத்தார். கொரோனா போன்ற சிக்கலான காலகட்டங்களில் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக உணவுப் பொருட்களின் விற்பனை அதிகரிக்கவும் இக்கருத்தரங்கு வழிவகை செய்துள்ளது. இந்த கருத்தரங்கில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர் முத்து, மற்றும் மதுரை பாண்டியன் அப்பளம் நிறுவனர் திருமுருகன் கலந்து கொண்டு தங்களது அனுபவம் மற்றும் ஆலோசனைகளைக் கூறினர். மேலும் இக்கருத்தரங்கில் ஆலோசகர்கள் பிரியா குணசேகரன், ராதாகிருஷ்ணன், பல்வேறு தொழில் முனைவோர்கள், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நல்ல தரமான உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதை எப்படி சந்தைப்படுத்துதல் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து, ஆலோசனைகள் வழங்கி, சந்தைப்படுத்துவதற்கான அத்தனை உத்திகளையும் சொல்லிக்கொடுத்து, அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளார் Biznet நிறுவனத்தின் நிறுவனர். 100 தொழில் முனைவோர்களை சிறந்த தொழில் அதிபர்களாக மாற்றுவதே இவருடைய லட்சியமாகும்.

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *