Breaking News
Home / செய்திகள் / உசிலம்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம்

உசிலம்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம்

உசிலம்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அமைப்பு சாரா அணி அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாம் மாநில மருத்துவரணி தலைவர் மருத்துவர் விஜயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.அதனை தொடர்ந்து பாஜக அமைப்பு சாரா அணி நிர்வாகிகளும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் மெய்ராஜன் உள்ளிட்டோரும் இரத்ததானம் செய்தனர்.இதில் அமைப்பு சாரா அணி மாநில துணை தலைவர் முத்து மற்றும் பாஜக நிர்வாகிகள், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை பணியாளர்களின் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான வருகிற 17ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மருத்துவபிரிவு சார்பில் மருத்துமுகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற உள்ளதாக மாநில மருத்துவரணி தலைவர் விஜயபாண்டியன் தெரிவித்தார்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

About Kanagaraj

Check Also

மதுரை கோ.புதூரில் ஏ.ஏ.பிளாஸ்டிக் & பேக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடி திறப்பு விழா

மதுரை கோ.புதூரில் ஏ.ஏ.பிளாஸ்டிக் & பேக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடி திறப்பு விழா மதுரை கோ.புதூர் ஆர்.சி.பள்ளி அருகில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *