Breaking News
Home / செய்திகள் / திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஜமீன் கூடலூர் கிராமத்தை சேர்ந்த சேவியர் மார்ட்டின் அவரது மனைவி ஜெயந்தி வயது 28 இவர் நன்கு மாத கர்ப்பிணி. இவர் கடந்த 16:09:2020 புதன்கிழமை கிழமை இரவு 10:00 மணியளவில் திடீரென அவருக்கு இரத்த போக்கு ஏற்பட்டது இதன் காரணமாக அவர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலயமான ஆவூர் சென்றார் அங்கு மருத்துவர் இல்லை மற்றும் அங்குள்ள செவிலியர்கள் நீங்கள் திருவண்ணாமலை கொண்டு செல்ல அறிவுறுத்தினர் அங்கிருந்து vetavalam ஆரம்ப சுகாதார மையம் சென்றுள்ளனர் அங்கும் அவர்கள் சிகிச்சை அளிக்க வில்லை இதனால் அவர்கள் கார் ஏற்பாடு செய்து கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர் அங்கு அனுமதி சீட்டு போட்டுகொண்டு பிரசவ வார்டுக்குள் அனுமதிக்கபட்டனர்

அவர்களுக்கு படுக்கை இல்லை ஏற்கனவே அந்த அறை முழுவதும் நோயாளிகள் நிறைந்து இருந்தனர் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வில்லை இவர்கள் வயிற்று வலி தாங்க முடியாமல் கீழே உட்கார்ந்து வலியில் கதறி இருக்கிறார். அங்குள்ள பணி புரியும் வார்டு பொறுப்பாளர் இவர்களை மரியாதை குறைவாக பேசியுள்ளார் ஏய் என்னடி பேசிட்டு கத்தி கிட்டு இருக்கீங்க என்று பேசியுள்ளார் அதற்கு ஜெயந்தி என்பவர் தயவுசெய்து இப்படி பேசாதீர்கள் கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள் நாங்கள் படித்தவர்கள் என்று சொல்லி இருக்கிறார் அதற்கு அந்த வார்டு பொறுப்பு செவிலியர் நீங்கள் படித்தவரென்றால் உங்களை வாங்க போங்க என்று கூப்பிடவேண்டுமோ என்று கேலி செய்யும் விதமாக கூறியதுடன் அல்லாமல் அவளுடைய சார்ஜ் சீட் கொண்டு வந்து கொடுங்கடி அவ எங்கயாவது போய் சிகிச்சை பார்த்து கொல்லட்டுமென்று சொல்லி இருக்கிறார்

இத்தனைக்கும் ஜெயந்தி அவர்கள் மருத்துவமனைக்கு வந்த நேரம் இரவு 12:00 மணி இந்த சம்பவம் நடந்தது நள்ளிரவு 2:30 இதுவரை எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை கேட்டதற்கு மருத்துவர் அறுவை சிகிச்சை அறையில் உள்ளார். நள்ளிரவு 12:00மணிக்கு சொன்ன அதே வார்த்தை மீண்டும் சொன்னார்கள் மணி நள்ளிரவு 3:00மணி வரை எந்த மருத்துவரும் சிகிச்சை கொடுக்க வில்லை

இதனால் வலி தாங்க முடியாத ஜெயந்தி தன் கணவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை விட்டு வெளியேறி தனியார் மருத்துவமனை வந்தார் அதிக இரத்த போக்கால் உடல் பலம் குறைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர் தெரிவிக்கின்றனர். இதனால் பாமர மக்களின் நலனுக்காக உருவாக்க தொடங்க பட்ட அரசு நிதியில் இயங்கும் மருத்துவ மனைகளில் இவ்வாறு மனித உரிமை மீறல்கள் தினமும் நடக்கின்ற நிகழ்வாக இருக்கிறது நடுத்தர மக்கள் இதுபோன்ற பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர் ஆனால் இதை புகார் அளிக்க மனமில்லாமல் தயங்கு கின்றனர் காரணம் அரசு ஊழியர்களுக்கு சார்பாக நிற்குமே தவிர மக்களுக்காக இல்லை என்ற மக்களிடம் மனதில் பதிந்து போன வடு. இத்தனைக்கும் இவர்கள் இருவரும் தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் .இந்த சம்பவத்தை துவங்கிய செவிலியரும் படித்துவிட்டு இந்த அரசு வேலைக்கு வந்தவர் தானே.
இப்போது தமிழகத்தை ஆளும் கட்சியினரின் தாரக மந்திரம்
மக்களால் நான்

மக்களுக்காகவே நான்ன்ற வார்த்தை வாரதயாகவே உள்ளதை இந்த தருணம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
இந்த சம்பவத்தை குறித்த ஜெயந்தி அவர்களின் கதறல் வாக்குமூலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வாட்சாப் எண்ணிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்களுக்கு ஆதரவாக இருப்பாரா அல்லது அரசு ஊழியர்களின் சார்பாக இருப்பாரா என்பது அவருடைய கையில் உள்ளது.இது போன்ற மனித உரிமை மீறல் இதுவே கடைசியக இருக்க மாவட்ட ஆட்சியர் தவறு செய்தபர்கள் மேல் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *