Breaking News
Home / செய்திகள் / பழனியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம்

பழனியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம்

பழனியில் அகில இந்திய எ பிளாக் கட்சியின் சார்பாக கட்சியின் மாநில தலைவர் கதிரவன் தலைமையில் மாவட்ட நகர ஒன்றியம் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில தலைவர் கதிரவன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய அரசு தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் வகையில் நீட் தேர்வு, விவசாயிகள் சட்டம், மின்சார சட்டம், கூட்டுறவு சட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தல், இதுபோன்ற மக்களை வஞ்சிக்கும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றது.மேலும் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. உடனடியாக மக்களின் நலன் கருதி மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பத்திரிக்கையாளர்கள் இடையே சந்திப்பு நிகழ்வில் உரையாற்றினார். மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை ஆலோசித்தனர்..

கலாம் நியூஸ் செய்திக்காக
பழநிசுரேஷ்

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *