Breaking News
Home / செய்திகள் / மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது

மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது

மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டதிருத்த மசோதா மூலம் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்பனைக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதால் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து பேருந்து நிலையம் முன்பு பசுமைப் புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.சி. பழனிச்சாமி, குளத்து பாசன விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 32 பேரை துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர் இப்போராட்டத்தில் பூவலிங்கம், ராசு, திருப்பதி, சரவணன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *