Breaking News
Home / செய்திகள் / இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் தொற்று வேகமாகப்பரவிவரும் சூழ்நிலையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிடாமல், இந்த சுருக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே, மத்திய அரசாங்கம் தான் பிறப்பித்திருந்த 11 அவசரச் சட்டங்களையும் சமூக முடக்கக்காலத்திலேயே சட்டமாக நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறது. மாநிலங்களவையில் இந்தச் சட்டமுன்வடிவுகளின் மீது உறுப்பினர்கள் விவாதம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை மறுத்தும், இதன்மீது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்கிற அவர்களின் உரிமையை நிராகரித்தும், இந்தியாவின் விவசாயத்தையும், விவசாயிகளையும் கடுமையாகப் பாதித்திடும் அவசரச்சட்டங்கள் அடாவடித்தனமாக நிறை வேற்றப்பட்டுள்ளன. இதுபோல் முன்னெப் போதும் நடந்ததில்லை. இது ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பான செயலாகும். நாடாளுமன்றத்தின் முன் ஒப்புதலுக்காக வரும் எந்த விஷயமாக இருந்தாலும் அதன்மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருவது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பின ருக்கும் இருந்துவரும் பிரிக்க முடியாத உரிமையாகும்.இந்த உரிமை முற்றாக அவமதிக்கப்பட்டு, காலில்போட்டு மிதிக்கப்பட்டிருக்கிறது. வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிய, எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.இந்தச் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிக்கொள்ள மத்திய கூட்டணிக்கு மாநிலங்கள வையில் தன்னை ஆதரிக்கும் கட்சி உறுப்பி னர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால்கூட பெரும்பான்மை கிடைக்காது என்பது நன்கு தெளிவாகி இருந்தது. எனவே, இந்தப் புதிய சட்டங்கள் முறை தவறியவையாகும், சட்டவிரோதமானவை யாகும். எனவே குடியரசுத் தலைவர் இவற்றை, அரசமைப்புச்சட்டத்தின் 111ஆவது பிரிவின்கீழ்,மீண்டும் மாநிலங்களவைக்கு, மறுபரிசீ லனைக்காக, திருப்பி அனுப்பிட வேண்டும். இந்தப் புதிய சட்டங்கள் இந்தியாவின் விவசாயத்தை, நம் விவசாய விளைபொருள்களை, நம் சந்தைகளை அந்நிய மற்றும் உள்நாட்டு வேளாண் வர்த்தக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தூக்கிக் கொடுக்கின்றன. இது நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சொல்லொண்ணா துன்பத்தையும் துயரத்தையும் அளித்து, அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அறுவடை செய்வதற்கு அபரிமிதமான முறையில் வாய்ப்பளித்திடும். குறைந்தபட்ச ஆதார விலை ஒழித்துக்கட்டப்படும்.குறைந்தபட்ச ஆதார விலை இப்போது நாட்டில் பல பகுதிகளில் பெயரளவில் அமல்படுத்தப்பட்டுவந்தபோதிலும், அது ஓர ளவுக்காவது விவசாயிகளின் வருமானத்திற்குப் பாதுகாப்பை அளித்து வந்தது. இப்போது இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டிருப்பதன் மூலம்,அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கப்படு வதற்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. இதன்மூலம்செயற்கையான முறையில் உணவுப் பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, அத்தியா வசிய உணவுப் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டு, நாட்டையும், நாட்டு மக்களையும் அச்சுறுத்திடும். கார்ப்பரேட் கம்பெனி கள் நிலங்களை குவிப்பதற்கு உதவும் வகையிலான முன்மொழிவுகள் மற்றும் வேளாண்வர்த்தகத்திற்கு லாபம் அளிக்கும்விதத்தில் ஒப்பந்த முறை சட்டப்பூர்வ மாக்கப்பட்டிருப்பது பாரம்பர்ய விவசாய முறையை முற்றிலுமாக அழித்து ஒழித்து விடும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். மேலும், விவசாயம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் மாநிலப் பட்டியலில் உள்ளது.இந்தச் சட்டமுன்வடிவுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இது நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிநாதமாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தை யும் ஆழமான முறையில் அரித்து வீழ்த்துவ தாகும். நாட்டின் நலன்கள் கருதியும், நமக்கு உணவு அளித்திடும் உழவர்களின் நலன்கள் கருதியும், உணவுப் பாதுகாப்புக்கான மக்களின் உரிமைகளுக்காகவும், மத்திய அரசாங்கம் இந்தச் சட்டமுன்வடிவுகளைத் திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. என்று யாதவர் பேரவை தலைவர் கேப்டன் ராஜன் கூறியுள்ளார்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *