Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உத்தங்குடி கண்மாய் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
btr

மதுரை மாவட்டம் உத்தங்குடி கண்மாய் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை மாவட்டம் உத்தங்குடி கண்மாய் வரத்து கால்வாயில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி 20 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில் வெயில் காலம் முடிந்து மழை காலம் வர இருப்பதையொட்டி விவசாய நிலங்களுக்கான நீர் பாசன வசதிகளை உறுதி செய்வது, அந்தந்த பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, மக்களின் குடிநீர் தேவையை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மதுரை மாவட்டம் உத்தங்குடி கண்மாயில் பொதுப்பணித் துறை மூலமாக நடைபெற உள்ள இக்கண்மாய் கரை புனரமைக்கும் பணி, சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி, வரத்து கால்வாய்கள் தூர் வாரும் பணி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது .

இதன் மூலமாக உத்தங்குடி கண்மாய் மூலமாக விவசாய நீர் பாசனம் பெறும் ஆயிரக்கணக்கிலான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் எனவும் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் உத்தங்குடி கண்மாயில் இருந்த 30 ஆக்கிரமிப்புகளும்,வரத்து கால்வாயில் இருந்த 21 ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இப்பணி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பவளக்கண்ணன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் சுபாஷினி, தாசில்தார் ராஜ்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் திலகவதி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *