Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை! தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை! தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை! தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! தாழ்வான பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, காவல்துறை அறிவுரை! திருநெல்வேலி,நவ.17:- திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இன்னும் சில இடங்களில், தகவல் தொடர்பு மற்றும் மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில், வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, காவல்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம், அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன் கரையோரப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை, தீவிரப்படுத்தியும் உள்ளனர். இதற்கிடையே, இன்று (நவம்பர். 17) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், பாபனாசம் அணையில்,ஒரேநாளில் சுமார் 10 அடியும், சேர்வலாறு அணையில் 18 அடியும், மணிமுத்தாறு அணையில் 4 அடியும், நீர்மட்டம் உயர்ந்துள்ளன. இடைவிடாது மழை பெய்து கொண்டே இருப்பதால், இந்த அணைகளில் நீர்மட்டம், இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருநெல்வேலி குறுக்குத் துறையில், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள, முருகன் கோவிலில் வெள்ளநீர் புகுந்துள்ளதால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார். பாலமேடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *