Breaking News
Home / செய்திகள் / மதுரையில் முதல்முறையாக நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் கோபுரம் சினிமாஸ் திறப்பு விழா

மதுரையில் முதல்முறையாக நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் கோபுரம் சினிமாஸ் திறப்பு விழா

மதுரை சினிமா ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக திரைப்பட தயாரிப்பாளர் அன்புச் செழியன் அவர்களது அயராத உழைப்பில் மதுரை செல்லூர் பகுதியில் மிகப்பிரமாண்டமாக மூன்று திரை அரங்குகளுடன் உருவாகி உள்ளது கோபுரம் சினிமாஸ் திரையரங்கம் .

தீபாவளி திருநாள் அன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்துள்ளனர்.

“கோபுரம் சினிமாஸ்” நிறுவனத்தின் உரிமையாளரான செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் இதனை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் முதல்முறையாக மதுரையில் நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் Laser Projector, 4 Way Speaker, 3D Projection மற்றும் அகன்ற திரை வசதி கொண்ட 3 திரைகளுடன் பிரம்மாண்ட கோபுரமாய் “கோபுரம் சினிமாஸ்” உருவெடுத்துள்ளது.

அன்னிய தேசங்களின் தொழில் நுட்பங்களை மொத்தமாக உள்ளடக்கி புத்தம்புது பொலிவுடன் காட்சியளிக்கும் Interiors, மின்விளக்குகள் மற்றும் மிகப்பிரம்மாண்டமாக கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் Video Wallஐ மக்களுக்காக படைத்துள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்காக நவீன கேமிராக்கள் மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கோபுரம் சினிமாஸ் நியமித்துள்ளது. மேலும் மின் தடங்கல் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மக்களின் வசதியை கருதி பிரம்மாண்ட பரப்பளவுள்ள கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங்கை உருவாக்கியுள்ளது.

மேலும் மிக முக்கிய அம்சமாக மதுரையில் எங்கும் இல்லாத அளவிற்கு Customer Care வசதி மற்றும் இலவச WiFi வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார். பாலமேடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *