திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வத்தலக்குண்டு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது. வட்டார தலைவர் காமாட்சி தலைமை வகித்தார். இதில் வட்டார நிர்வாகிகள் வட்டார துணை தலைவர் ராஜா,வட்டார பொருளாளர் பாண்டி,சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி ஸ்டெல்லா, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம், வத்தலக்குண்டு நகர பொறுப்பாளர் சுப்பிரமணியன்,நகர சிறுபான்மை பிரிவு கமர்தீன், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
