Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்ட குக்கிராமத்தில் நவீன கிரிக்கெட் பயிற்சி நிலையம்.

கன்னியாகுமரி மாவட்ட குக்கிராமத்தில் நவீன கிரிக்கெட் பயிற்சி நிலையம்.

கன்னியாகுமரி மாவட்ட குக்கிராமத்தில் நவீன கிரிக்கெட் பயிற்சி நிலையம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள குக்கிராமம் தொழிக்கோடு. இக்கிராமத்தில் இம்மாவட்ட இளைஞர்களுக்கு நவீன முறையில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் வகையில் நாஞ்சில் கிரிக்கெட் அகாடமி மற்றும் நாஞ்சில் கிரிக்கெட் கிளப் துவங்கியது.

துவக்க விழாவிற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் MLA தலைமை தாங்கி கிளப் அலுவலகத்தை திறந்து வைத்தார். குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் MLA விளையாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். பூட்டேற்றி பங்கு தந்தை ஜாண் போஸ்கோ அர்ச்சித்து ஜெபம் செய்தார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை அகாடமி உரிமையாளர் பெல்சின் ராஜா, கிளப் நிர்வாகிகள் தியாகராஜ், ஆல்வின் பிரதீப், டாக்டர் மனோஜ் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் இராஜகிளன், கீழ்குளம் பேரூர் திமுக செயலாளர் கோபால், கிள்ளியூர் வட்டார மார்க்சீஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் எபிலைசியஸ் ஜோயல், அதிமுக கருங்கல் பேரூர் துணைச்செயலாளர் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அகாடமி மற்றும் கிளப் நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *